ராமநாதபுரம் மாவட்டம் காரங்காடு சமூகம் சார்ந்த சுற்றுலாவை மூட வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட இந்த சுற்றுலா திட்டம், தற்போது கிராம மக்களுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், இங்கு படகு சவாரி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து மீனவ மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது, முகத்துவார பகுதியில் சிப்பி, இறால், மீன் போன்றவற்றை பிடிக்க முடியாமலும், மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியாமலும் தவிப்பதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.