திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பாக்கியபுரம் புனித ஆரோக்கிய மாதா அன்னை ஆலயத்தின் 40 ஆம் ஆண்டு திருவிழாவையொட்டி நடைபெற்ற அலங்கார தேர் பவனியில் திரளானோர் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர். கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அலங்கார தேர் பவனி நடைபெற்றது. முன்னதாக அந்தோணியார், குழந்தை ஏசு, சூசையப்பர் சொரூபங்கள் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள தேர் முக்கிய வீதிகளில் பவனி வந்தது.