தேனி மாவட்டத்திலுள்ள வைகை அணையில் இருந்து வரும் 15ஆம் தேதி தண்ணீர் திறக்க உள்ளதாகவும், இதற்காக தமிழக அரசின் அனுமதி கேட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அனுமதி ஓரிரு நாட்களில் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டு சரியான நேரத்தில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 59 அடியை எட்டியுள்ளது. அணையில் போதுமான நீர் இருப்பு உள்ளதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.