திருவாரூர் அருகே இறந்தவர் உடலை வைத்து சாலைமறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதயமார்த்தாண்டபுரத்தில் கூலித் தொழிலாளி துரைராஜ் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டின் முன்பு கொட்டகை அமைக்க ஏற்பாடு செய்த நிலையில், பாலசுப்பிரமணியம் என்பவர் தனது இடம் எனக் கூறி தடுத்ததால் கிழக்குக் கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.