ஏற்காட்டில் உள்ள எம்எஸ்பி காபி தோட்டத்தில் பணிபுரிந்து வரும் ஜார்கண்ட் மாநில தொழிலாளிகள். அதில் ஒரு தொழிலாளியின் 4 வயது மகன், அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த அடுத்த நொடியே உயிரிழப்பு. சில மணி நேரத்தில் சைலண்ட்டாக குழிதோண்டி புதைத்த காபி தோட்ட நிர்வாகம். சிறுவன் உயிரிழந்த தகவலை அதிகாரிகளுக்கு சொல்லாமல் அவசர அவசரமாக புறம்போக்கு நிலத்தில் புதைத்தது ஏன்? காவல்துறை விசாரணைக்கு தோட்ட நிர்வாகம் ஒத்துழைக்க மறுப்பதன் மர்மம் என்ன? பெண் விஏஓ வைஷ்ணவிக்கு ஒரு போன் வந்துருக்குது. மேடம், சேலம் காவிரிபிக் பகுதிக்கு பக்கத்துல உள்ள MSP காபி தோட்டத்துல ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நாலு வயசு சிறுவன் உயிரிழந்துட்டதாகவும், யாருக்கும் தெரியாம காபி தோட்ட நிர்வாகத்தினர், குழிதோண்டி புதைச்சிட்டதாகவும் எதிர்முனையில பேசுன நபர் சொல்லிருக்காரு. அதுக்குப்பிறகு, அந்த காபி தோட்டத்துக்கு காவல்துறையினரோட போன விஏஓ, அங்க இருந்த தொழிலாளிகள்கிட்ட விசாரணை நடத்திருக்காங்க. அப்ப தான், விஏஓ வைஷ்ணவிக்கு வந்த ரகசிய தகவல் உண்மை தான் அப்டிங்குறது தெரிய வந்துச்சு.ஏற்காட்டுல இருந்து பத்து கிலோமீட்டர் தூரத்துல இருக்குது MSP காபி தோட்டம். இந்த தோட்டத்துல ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கி இருந்து வேலை பாத்துட்டு இருக்காங்க. அதுல பகுசன்சாய்-பில்லா சாய் தம்பதியும் 3 பிள்ளைகளோட தங்கி இருந்து வேலை பாத்துட்டு இருக்காங்க. அந்த தம்பதியோட நாலு வயசு சிறுவன், வீட்டுக்கு பக்கத்துல விளையாடிட்டு இருந்துருக்கான். அப்போ, அங்க மின்கம்பி அறுந்து விழுந்தத பாக்காத சிறுவன், அதுல கால் வச்சதும் தூக்கி வீசப்பட்டு நொடிப்பொழுதுல உயிரிழந்துருக்கான்.அக்கம்பக்கத்துல உள்ளவங்க பாத்து தகவல் சொன்னதும் ஓடிவந்த பெற்றோர் சிறுவன மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோக முயற்சி பண்ணதா சொல்லப்படுது. ஆனா, அதுக்குள்ள அங்க வந்த காபி தோட்ட நிர்வாகத்தினர் சிறுவன் உயிரிழந்துட்டதாகவும், ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போனாலும் காப்பாத்த முடியாதுன்னும் சொல்லி, பெற்றோரை அமைதிப்படுத்தினதா தெரியுது. அதோட, சிறுவனோட சடலத்த அவசர அவசரமா அங்க இருந்து கொண்டுபோய் தோட்டத்துல இருந்து 5 கிலோமீட்டர் தூரத்துல உள்ள ஒரு புறம்போக்கு நிலத்துல குழிதோண்டி புதைச்சிருக்காங்க.தமிழ் மொழி தெரியாததாலும், பெருசா படிப்பறிவு இல்லாததாலும் ஜார்கண்ட் மாநில தம்பதி நடந்த விஷயத்த பத்தி, வெளிய சொல்லாம இருந்ததா சொல்லப்படுது. இதுக்கு மத்தியில தான் சம்பவம் நடந்த ரெண்டு நாளைக்குப்பிறகு விஏஓ வைஷ்ணவிக்கு பெயர் சொல்ல விரும்பாத ஒருத்தரு தகவல் சொல்லிருக்காரு.அதுக்குப்பிறகு தோட்டத்துக்கு வந்து அதிகாரிகள் விசாரணை நடத்துனப்ப அங்க இருந்த தொழிலாளிகள் மின்கம்பி பலநாளாவே அறுந்து கிடக்குறதாகவும், அத நிர்வாகத்துக்கிட்ட எத்தனையோமுறை சொல்லியும் அவங்க கண்டுக்காததால தான் இந்த உயிரிழப்பே ஏற்பட்டதாவும், கொந்தளிச்சதா கூறப்படுது.இதுஒருபக்கம் இருக்க, சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்புல இருந்து யாருமே காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைப்பு குடுக்கலனு சொல்லப்படுது. விசாரணைக்கு வர முடியாது, உங்களால முடிஞ்சத பாத்துக்கோங்கனு காபி தோட்ட மேனேஜர் காவல்துறை அதிகாரிகள்கிட்டயே சொன்னதாகவும் கூறப்படுது. மின்கம்பி பலநாளா அறுந்து கிடக்குறதா தொழிலாளர்களே சொல்லியும், ஏன் தோட்ட நிர்வாகம் அத கண்டுக்கல? சிறுவன் மின்கம்பில மிதிச்சி உயிரிழந்தத மறைச்சி எதுக்காக புறம்போக்கு நிலத்துல அவசர அவசரமா அடக்கம் செய்யணும்? காவல்துறையோட விசாரணைக்கு ஒத்துழைக்காம எதுக்காக காபி தோட்ட நிர்வாகத்தினர் முரண்டு புடிக்கணும்? இதுக்கு பின்னால என்ன மர்மம் ஒழிஞ்சிருக்குது பல சந்தேகங்கள் எழுறதால, காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணையில இறங்கிருக்காங்க.. இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | தோட்டத்தில் களை எடுத்த பெண், குண்டுகட்டாக தூக்கி சென்று நாசவேலை | Thoothukudi