தஞ்சையில், மாமன்னர் ராஜராஜ சோழனின் 1040ஆவது சதய விழாவை முன்னிட்டு, 1040 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நாட்டியாஞ்சலி கோலாகலமாக நடைபெற்றது. ராஜராஜ சோழனின் சதயவிழாவையொட்டி, பெரிய கோயில் வளாகத்தில் பட்டிமன்றம், கவியரங்கம், திமுமுறை முற்றுதல் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த நாள் மற்றும் அரியணையில் ஏறிய ஐப்பசி சதய நட்சத்திரம், ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 1040ஆவது சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் ஒரு பகுதியாக, அட்சமா கலை பயண வழிகாட்டுதல் குழுவினர் சார்பில், 1,040 நாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், திரளானோர் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். இதையும் பாருங்கள் - மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா - நரம்புகளை புடைக்க வைத்த முழக்கம் | MahamannanRajarajaChola