பாரதத்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட இந்த நாள் வரலாற்றில் கருப்பு நாள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜ்பவனின் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆளுநர், 1975ஆம் ஆண்டு இந்த கருப்பு நாளில் பாரதத்தின் ஜனநாயகம் கொல்லப்பட்டு, அரசமைப்பு நசுக்கப்பட்டு, குடிமக்களின் அடிப்படை உரிமைகள் இடை நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அப்போது, பல்கலைக்கழக மாணவனாக இருந்த தான், விடுதி அறையை காலி செய்யாததற்காக துப்பாக்கியால் அடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், மகத்தான தேசம் ஒருபோதும் அத்தகைய கருப்பு நாளை அனுபவிக்கக்கூடாது என்பதை நாம் ஒவ்வொருவரும் உறுதி செய்வோம் என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.இதையும் படியுங்கள் : கொக்கைன் போதைப் பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகிருஷ்ணாவிடம் போலீஸ் விசாரணை.