சிவகங்கை புத்தகத் திருவிழாவில் நடனமாடிக் கொண்டிருந்த நடன ஆசிரியர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மன்னர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், அகிலாண்டபுரத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் சக கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். இதனையடுத்து கீழே இறங்க முயன்றபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.