மேலூரில் புதிதாக திறக்கப்பட்ட மொபைல் கடையில் ரூ.1,500 மதிப்பிலான பொருட்கள் ரூ.99க்கு கொடுக்கப்பட்டதால் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் கூட்டம் அலைமோதியது. மதுரையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மொபைல் விற்பனை கடையான கலிபா ஹை டெக் மொபைல், தனது பிரமாண்ட ஷோரூமை மேலூரில் இன்று திறந்தது. புதிய மொபைல் கடை திறப்பு விழா சலுகை இதனையொட்டி திறப்பு விழா சலுகையாக ரூ.1,500 மதிப்பிலான, ஒரு ஏர்பட்ஸ் ஹெட்போன், ஒரு காலர் ஹெட்போன், ஒரு புளுடூத் செல்ஃபி ஸ்டிக், மற்றும் ஒரு ஹெட்போன் ரூ.99க்கும், ரூ.700 மதிப்பிலான ஸ்மார்ட் வாட்ச் ரூ.49க்கும் வழங்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்டு, அதற்கு தங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்து அதன் மூலம் பெறப்படும் கியூஆர் கோடு வழங்கப்பட்டு அதன் மூலம் ஆஃபர் பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை வாங்குவதற்காக, ஒரே நேரத்தில் கடையின் முன்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆஃபர் பொருட்களால் மக்கள் மகிழ்ச்சிஇதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மேலூர் காவல்துறையினர், வாடிக்கையாளர்களை ஒழுங்குபடுத்தி ஆஃபர் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்தனர். அதனை வாங்கிச் சென்ற இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தங்களுடைய வாழ்வியலில் மொபைல் போன் அத்தியாவசியமாக மாறிவிட்ட நிலையில், அதை சார்ந்த பொருட்கள் இதுபோன்ற ஆஃபர் மூலம் வழங்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றது என தெரிவித்து ஆர்வமுடன் வாங்கி சென்றனர். புதிதாக திறக்கப்பட்ட கடையின் முன்பாக ஒரே நேரத்தில் மக்கள் கூடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. Related Link எங்களுக்கும் அங்கீகாரம் கொடுங்கள்