கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பொதுமக்களை அச்சுறுத்திய முதலையை, அப்பகுதி இளைஞர்களே தைரியமாக பிடித்தனர். அறந்தாங்கி கிராமத்தில் உள்ள அட்டை குளத்தில் கடந்த சில மாதங்களாக உலா வந்த முதலையை வனத்துறையினர் தேடி வந்த நிலையில், கிராமத்து இளைஞர்கள் குளத்தில் இறங்கி முதலையை பிடித்தனர்.