கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத்தில் உள்ள குட்டையில் முதலை நடமாட்டம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, குட்டையை சுற்றி நைலான் வலையை கட்டி தண்ணீரை வெளியேற்றி முதலையை பிடிக்கும் முயற்சியில் சிறுமுகை வனத்துறையின் ஈடுபட்டுள்ளனர்.