விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் திருமேனிநாதர் கோவில் ஆடித்தபசு திருவிழா, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தங்கக் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, திருக்கொடி ஏற்றப்பட்ட நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.