புழல் சிறை உணவு குறித்து புகாரளித்த விசாரணை கைதி தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த கோபாலபிள்ளை விஜயலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது உறவினர் புஷ்பராஜ், சிறை உணவு தரமற்று இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் புஷ்பராஜை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு, தனிமை சிறையில் அடைத்ததாக தெரிவித்துள்ளார்.