சென்னை அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அயப்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்தக் கோரி, பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணைக்கு வட்டாட்சியர் ஆஜராகவில்லை. இதையும் படியுங்கள் : பராமரிப்பு பணி - ரயில் சேவையில் மாற்றம்.. 7 மின்சார ரயில்கள் ரத்து என அறிவிப்பு