தங்களுடைய நிலத்தை மீட்டு தர வேண்டுமென கூறி தம்பதிகள் குடும்பத்துடன் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குள்ளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வாலாஜாபேட்டை படத்தைச் சேர்ந்த பூ வியாபாரி சேகர் என்பவர், தனது 2.5 ஏக்கர் நிலத்தை பெருவளையம் ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்பவரிடம் 14 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார். பணத்தை திரும்ப அளித்து விட்டு, அசல் ஆவணங்களை கேட்ட போது, எட்டு மாதங்களாக ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது.