தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பட்டாசு பாக்ஸிற்காக திமுக கவுன்சிலர் கடை ஊழியரை தகாத வார்த்தையில் திட்டி மிரட்டும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. எம்ஜி ரோடில் வடமாநில இளைஞர் நடத்தி வரும் மளிகை கடையில் தீபாளியை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்தார். இந்நிலையில் தீபாவளியன்று கடைக்கு சென்ற பாலக்கோடு பேரூராட்சி 12-வது வார்டு திமுக கவுன்சிலர் பட்டாசு பாக்ஸ் கேட்டுள்ளார். அப்போது கடை ஊழியர் தர மறுத்த நிலையில், தகாத வார்த்தையால் திட்டி கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்தார்.