நெல்லை மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டம் முடிந்த பின் மாமன்ற உறுப்பினர் பவுல்ராஜ் கையில் துடைப்பத்துடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மாநகராட்சி கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 10 நிமிடங்களில் கூட்டம் முடிந்தது. இந்நிலையில் மாமன்ற உறுப்பினரான பவுல்ராஜ் 700க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை தனியார் நிறுவனத்திற்கு அனுப்பியதில் பெரிய ஊழல் இருப்பதாகக் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.