கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சமுதாய கூடத்தின் கட்டுமான பணிகள் கடந்த ஒரு வருடமாக பாதியில் நிறுத்தப்பட்டள்ள நிலையில், விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கருப்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேங்காம்பட்டியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சமுதாய கூடம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதனிடையே சமுதாய கூடம் கட்டப்பட்டு வரும் இடம் கோயிலுக்கு சொந்தமானது என வழக்கு தொடரப்பட்ட நிலையில், மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியது.