ஆட்சியர் உத்தரவின் பேரில் தங்களுக்கு வழங்கவிருந்த இலவச வீட்டிற்கான கட்டுமான பணி கடந்த ஓராண்டாக பாதியில் நிற்பதாக கரூரில் கணவனை இழந்து வாடும் பார்வை மாற்றுத்திறனாளி பெண் கண்ணீர் மல்க தெரிவித்தார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளிக்க குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெயஜோதி, ஆதரவின்றி தவிக்கும் தனக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரியும், இலவச வீடு வழங்கக் கோரியும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.