விருதுநகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் அருங்காட்சியக பணிகளின் ஒப்பந்த காலம் 20 நாட்களில் முடிவடையவுள்ள நிலையில் பணிகள் மந்தமாக நடைபெறுவதாக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை அமைச்சர் தங்கம் தென்னரசு கடிந்துகொண்டார். விருதுநகரில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அரசு அருங்காட்சியகத்திற்காக 2 ஏக்கர் பரப்பளவில் 6 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 50 சதவீத கட்டுமான பணிகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில், கட்டடத்தை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்படும் வரை முதலமைச்சர் காத்திருப்பாரா என காட்டமாக அதிகாரிகளை சாடினார்.இதையும் படியுங்கள் : கவினின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் விசாரணை... கவினின் பெற்றோரிடம் தேசிய பட்டியலின ஆணைய தலைவர் விசாரணை