தஞ்சாவூர் அருகே தங்களது ஊரில் நிறுத்த மறுத்த தனியார் பேருந்தை பொதுமக்கள் வழிமறித்ததோடு, ஓட்டுநர் சீருடை இல்லாமலும், மது போதையில் இருந்ததையும் கண்டு போலீஸில் புகார் செய்துள்ளனர். பாபநாசம் அருகே பண்டாரவாடை பகுதியை சேர்ந்த அமானுல்லா, ஊருக்கு செல்வதற்காக கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால், அந்த பேருந்தின் நடத்துநர், பண்டாரவாடையில் பேருந்து நிற்காது எனக் கூறியதால் ஆத்திரமடைந்த அவர், ஊரிலுள்ள மக்களுக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து, கிராம மக்கள் பேருந்தை வழிமறித்தபோது, ஓட்டுநர் , சீருடை இல்லாமலும், மதுபோதையிலும் இருந்தது தெரியவந்தது.