மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழும் வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, தனது பேரனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆட்சியரின் பேரனுக்கு அண்மையில் சளித்தொல்லை காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.