கொடைக்கானலில் தொடர்ந்து ஐந்து நாட்களாக பெய்த கனமழையால், மேக கூட்டங்கள் தரையிறங்கி காணப்பட்டன. நகரின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, மூஞ்சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டம் காணப்பட்டதால் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் மெதுவாக சென்றனர்.