விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக வடமாநில இளைஞரை,பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். செண்டூர் கிருஷ்ணா நகரை சேர்ந்த சேதுராமன் வழக்கம் போல் ஓட்டுநர் பணிக்கு சென்ற நிலையில், அவரது மனைவி ஷாலினி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வடமாநில இளைஞர் ஒருவர், வீட்டின் கதவை வேகமாக தட்டி சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் ஷாலினி கத்தி கூச்சலிட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வடமாநில இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.