கள்ளக்குறிச்சியில் உரிய நேரத்தில் ஊதியம் வழங்குமாறு வலியுறுத்திய தூய்மை பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி விடுவேன் என நகர்மன்றத் தலைவர் மிரட்டிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செய்தியாளர்களுக்கு யார் தகவல் கொடுத்தது என்று எகிறிய நகர்மன்றத் தலைவர் சுப்பராயலு, இதுபோல செய்தால் 6 மாதமானாலும் சம்பளம் வாங்க முடியாது என்றும் எச்சரித்தார்.