திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ஓடும் ரயிலில் கஞ்சா போதையில் அரிவாளை காட்டி மிரட்டி ரீல்ஸ் எடுத்த சிறார்கள் தட்டிக்கேட்ட வடமாநில இளைஞரை தனியே அழைத்து சென்று அரிவாளால் வெட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற ரயிலில் பயணித்த மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இளைஞரிடம் கத்தியை காட்டி ரீல்ஸ் செய்து நான்கு இளைஞர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தட்டிக்கேட்டதால் ரயில் நிலைய மதில் சுவர் வெளிப்புறத்தில் வைத்து அவரை ரத்தம் சொட்ட சொட்ட தாக்கியுள்ளனர். இந்நிலையில் போலீசார் சிறார்கள் நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.