திருப்பத்தூர் அருகே வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த தாக கூறப்படும் நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சின்னபசிலிகுட்டை பகுதியை சேர்ந்த மோகன்- பிரவீனா தம்பதியரின் 2 வயது குழந்தை கிருத்திகாவை காணவில்லை என்று பெற்றோர் அக்கம் பக்கத்தில் ஒரு மணி நேரமாக தேடிவந்தனர். இந்நிலையில் தண்ணீர் தொட்டியில் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக குழந்தையை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.