ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே கோணவாய்க்கால் பகுதியில் மேம்பாலத்திற்கு அடியில் தங்கி சீமார் பின்னி விற்பனை செய்து வரும் கூலித் தொழிலாளியின், ஒன்றரை வயது பெண் குழந்தை காணாமல் போன நிலையில், குழந்தை கடத்தப்பட்டதா?, எவ்வாறு காணாமல் போனது? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு அடியில் வசித்து வரும் ஆந்திர மாநிலம் நெல்லுறை சேர்ந்த வெங்கடேஷ்- கீர்த்தனா தம்பதி, தங்களது மகன், மகளுடன் உறங்கி கொண்டிருந்த நிலையில், காலையில் எழுந்து பார்த்த போது ஒன்றரை வயது பெண் குழந்தை வந்தனாவை காணாததால் அதிர்ச்சியடைந்தனர்.