விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மறைந்த லால்குடி ஒன்றிய தலைவரின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையில் 3 ஆண்டுகளாக பணம் இல்லை திரும்புவதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த லால்குடி ஒன்றிய தலைவர் அப்பாவு 2021 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு இயக்கம் சார்பில் 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது. இதுவரை அந்தப் பணத்தை பெற முடியவில்லை என்றும், காசோலை கொடுத்துவிட்டு ஏமாற்றுவது நடிகர் விஜய்க்கு தெரியாது என்றும், களங்கம் ஏற்படுத்தும் வகையில் நிர்வாகிகள் செயல்படுவதாகவும் அப்பாவு-வின் மனைவி தெரிவித்துள்ளார்.