13 ஆண்டுகளுக்கு பிறகு தேர் திருவிழா நடக்க உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் அரசம்பட்டு கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.அரசம்பட்டில் உள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை யார் தலைமையில் நடத்துவது என இரு தரப்பினர் இடையே மோதல் இருந்து வந்தது.தொடர்ந்து, இருதரப்பினருடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு சனிக்கிழமை தேர் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.