பா.ம.க.விற்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக அரியலூர் மற்றும் பெரம்பலூரில் திமுகவிற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளதாக, அமைச்சர் கே.என் நேரு கூறினார். அரியலூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டத்தில் பேசிய அவர், இந்த கருத்தை கூறினார். பாமக பிரச்சனைக்கு திமுகதான் காரணம் என ஏற்கனவே அன்புமணி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அமைச்சர் பேச்சால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.