விழுப்புரம் அருகே புயலால் பாதிக்கப்பட்ட மலட்டாறு பகுதியை மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர். மத்திய அரசின் இணை செயலாளர் நஜேஷ் குப்தா தலைமையில் வந்த குழுவினர், அரசூர் அருகே மலட்டாறு பகுதியை ஆய்வு செய்தனர். ஆற்றில் இறங்கி பார்வையிட்ட குழுவினர், அங்கிருந்த பொதுமக்கள், விவசாயிகளிடம் வெள்ளப் பாதிப்பு குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்.