குறவர் சமூகத்தின் அனைத்து உப சமூகத்தையும் பழங்குடியினர் என்று வகைப்படுத்த உத்தரவிட கோரிய மனுவுக்கு மத்திய சமூக நலத்துறை செயலர் மற்றும் தமிழக தலைமை செயலர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ராம்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், குறவர் உள்பட 28 உபகுழுக்களாக உள்ள தங்களை பழங்குடியினராகவே வகைப்படுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.