தமிழ்நாட்டுக்கு, பேரிடர் நிவாரண நிதியாக 24 ஆயிரத்து 679 கோடி ரூபாய் நிவாரணம் கேட்ட நிலையில், வெறும் 17 விழுக்காடு நிதியை மட்டுமே மத்திய அரசு விடுவித்திருப்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் 3ஆவது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், கடந்த 4 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 136 கோடி ரூபாயை மட்டுமே மத்திய அரசு கொடுத்ததாக சாடினார். இதோடு, சென்னையில் கூடுதலாக 600 மின்சாரப் பேருந்துகளை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.