நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தை வளர்ப்பு நாயை துரத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காம்பாய் கடை பகுதியில் அரங்கேறிய இச்சம்பவத்தால் அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள், சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.