மதுபோதையில் போலீஸாரின் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடலூர் மாவட்டம் கிளியனூரில் மதுக்கடை அருகே கடந்த மாதம் 18-ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அங்கு நண்பருடன் நின்று கொண்டிருந்த அபினேஷ் என்கிற இளைஞரை, அங்கிருந்து செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வாக்கிடாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்ததால் அபினேஷ் கைது செய்யப்பட்டார்.