திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில், பைக்கில் சென்ற 2 பேர் தூக்கி வீசப்பட்ட பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஊத்துக்குளி ஆர்.எஸ். பகுதியை சேர்ந்த ராதா என்பவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உடன் கடைக்கு சென்று திரும்பி கொண்டிருந்தார். அப்போது, இவர்கள் சென்ற பைக் மீது மோதிய கார், சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த மற்றொரு கார் மீதும் மோதியது. இந்த விபத்தில் ராதா உயிரிழந்த நிலையில், சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் விபத்து ஏற்படுத்திய கார்த்திகேயன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.