திருப்பூர் அருகே ஷெட்டில் நிறுத்தி வைத்திருந்த காரை எடுக்க முயன்றபோது திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் சிவசக்தி விநாயகர் தெருவில் உள்ள கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான ஷெட்டில் கருப்புசாமி என்பவர் காரை நிறுத்தி வைத்திருந்தார். இந்த சூழலில், கோவிலுக்கு செல்வதற்காக அவரது மனைவி உமா மகேஸ்வரி காரை எடுக்க முயன்றபோது தீப்பற்றி எரிந்தது.