கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் அதன் ஓட்டுநர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.அன்னூர் சாலை மேல் மைதானம் அருகே திங்கட்கிழமை இரவில் கார் ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து தகவலறிந்து விரைந்த தீயணைப்புத்துறையினர் காரில் ஏற்பட்ட தீயை நீண்ட போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.இதில் அதன் ஓட்டுநரான சிறுமுகை பகுதியைச் சேர்ந்த நவீன் என்பவர் தீயில் கருகி காரிலேயே உயிரிழந்த நிலையில், அவரது உடலை மீட்ட போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.