சென்னை துறைமுகம் பகுதியில் காரை ரிவர்ஸ் எடுத்த போது கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்த நிலையில், அதில் இருந்த கடலோர காவல் படை வீரர் தப்பினார். இருப்பினும் காருடன் சேர்ந்து நீரில் மூழ்கிய ஓட்டுநரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மூலக்கடை பகுதியை சேர்ந்த முகமது ஷாகி என்பவர் காரில், கடலோர காவல் படை அதிகாரி ஜோகேந்திர காண்டாவை ஏற்றி சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.