ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் சென்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார் பள்ளத்திற்குள் பாய்ந்த போது எதிரே எந்த வாகனமும் வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.