ஒசூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மின்கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொத்தக்கொண்டப்பள்ளி பகுதியில் நஞ்சுண்டப்பா என்பவர் கார் ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தின் மீது மோதி, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இன்பதமிழ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.