நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் மீது மோதியதில் மூவர் காயமடைந்தனர். ஐந்திற்கும் மேற்பட்ட குக் கிராமங்களை ஒன்றிணைக்கும் முக்கிய சந்திப்பான கக்குச்சி கிராம சந்திப்பில், திங்கட்கிழமை மாலை பெண்கள் சிலர் சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது கக்குச்சி நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக, சாலையோரம் நின்றிருந்த பெண்கள் மீது மோதியது. அதில் படுகாயமடைந்த மூவரை உடனடியாக அக்கம்பக்கத்தினர் மீட்டு, கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையும் படியுங்கள்: ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டியிடம் தாலி பறிப்பு... மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு தாலி பறிப்பு