சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தரைப்பாலம் சேதமாகி பேருந்துகள் வந்து செல்லாததால் பொதுமக்கள், பள்ளி மாணக்கர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி உள்ளதாக வேதனை தெரிவித்தனர். களத்தூர் ஊராட்சியில் உள்ள குடிக்காடு கிராமத்துக்கு காரைக்குடிக்கு தினமும் அரசு பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், கொட்டகுடி ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பாலம் சேதமானதால் பேருந்து நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.