மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்த நிலையில், குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அரசு பேருந்து சிக்கிக்கொண்டது. பேருந்தை வெளியே எடுக்க நீண்ட நேரம் முயற்சித்தும் முடியாததால் பயணிகள் பேருந்தை விட்டு கீழே இறங்கினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.