திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே செயல்படும் அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் சேதமடைந்து இருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்னக்கலையமுத்தூரில் உள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்த கட்டடத்தில் மேற்கூரை பெயர்ந்த நிலையிலும், சுவர்கள் பாசனம் பிடித்து இடிந்து விழும் தருவாயிலும் உள்ளதால் இங்கு வருவதற்கே அச்சமாக இருப்பதாகக் கூறும் அப்பகுதி மக்கள் புதிய கட்டடம் கட்டித்தருமாறு அரசுக்குக் கோரிக்கை விடுக்கின்றனர்.