தூத்துக்குடி, சாத்தான்குளத்துல உள்ள காந்திநகர சேர்ந்தவர் 25 வயசான சுடலை. இவரு பந்தல் போட்ற வேலைய பாத்துட்டு இருந்துருக்காரு. இந்த சூழல, காந்திநகர சேர்ந்த இளைஞர்கள் சிலர், அங்க உள்ள டாஸ்மாக்ல மது குடிச்சிட்டு இருந்துருக்காங்க. அப்போ, அங்க வந்த சாத்தான்குளத்த சேர்ந்த சுந்தர்-ங்குற டீமுக்கும், காந்திநகர் டீமுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பா மாறிருக்குது.அதுக்குப்பிறகு, அங்க இருந்த மக்கள் எல்லாரும் சேர்ந்து இந்த சண்டைய விலக்கி விட்டுருக்காங்க. ஆனா, டாஸ்மாக்ல நடந்த சண்டைய மனசுலே வச்சிட்டு இருந்த சுந்தர் தன்னோட கூட்டாளிகள கூப்பிட்டுக்கிட்டு, மறுநாள் காலையில பிரச்சனை பண்றதுக்காக காந்திநகருக்கு போயிருக்காங்க. கத்தி கூப்பாட்டு போட்டபடியே ஏரியாக்குள்ள வந்த கும்பல, இளைஞர் சுடலை ஏரியாக்குள்ள வரவிடாம தடுத்தி நிறுத்திருக்காரு. எங்க ஏரியாக்குள்ள வந்து பிரச்சணை பண்ற வேலையெல்லாம் வச்சிக்காதீங்க ஒழுங்கா இங்க இருந்து கிளம்பிடுங்கன்னு சுந்தர்கிட்ட சொல்லிருக்காரு சுடலை. நீ யாரு எங்கள ஏரியாக்குள்ள வரக்கூடாதுன்னு சொல்றதுக்குன்னு கேட்டு சுந்தர் சண்ட போட்டிருக்கார். சுடலை பட்டியலினத்த சேர்ந்தவர். சாத்தான்குளத்த சேர்ந்த சுந்தர் மாற்று சமூகத்த சேர்ந்தவன். சாதிய காரணங்காட்டி சுடலைய ஆபாச வார்த்தைகளால பேசிருக்கான் சுந்தர். பதிலுக்கு சுடலையும் தகாத வார்த்தைகளால பேச, ரெண்டு தரப்புக்கு இடையில சண்ட வந்துருக்கு. பட்டியலினத்த சேர்ந்த நீ எங்ககிட்டயே எகிறியா, தைரியமான ஆளா இருந்தா ஒத்தைக்கு ஒத்தை மோதி பாக்கலாம்னு சொல்லிருக்கான் சுந்தர். மோதி பாக்க நான் ரெடி, யார வேணா கூப்பிட்டு வா, நான் இந்த இடத்துலேயே இருக்கேன்னு சுடலை சொன்னதா சொல்லப்படுது. அதுக்குப்பிறகு, அங்க இருந்து கொலைவெறியோட கிளம்புன சுந்தர், கொஞ்ச நேரத்துலேயே கையில அரிவாள எடுத்துக்கிட்டு தன்னோட கூட்டாளிகள் ரெண்டு பேத்தோட காந்திநகருக்கு வந்துருக்கான். அப்போ, தன்னோட நண்பர்கள்கூட நின்னு பேசிட்டு இருந்த சுடலைய, சுந்தர் அரிவாளால சரமாரியா வெட்டிருக்கான். கூட இருந்தவங்க இந்த கொலைய பாத்ததும் நாலாபுறமும் சிதறியடிச்சிட்டு ஓடிருக்காங்க. சரமாரியான அரிவாள் வெட்டுல அதிக ரத்தம் வெளியேறி சுடலை சம்பவ இடத்துலயே உயிரிழந்துட்டாரு.அடுத்து அங்க வந்த போலீஸ், சுடலையோட சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்கிற வேலையில இறங்குனாங்க. அப்போ, சுடலையோட உறவினர்கள் கொலையாளிய கைது பண்ண சொல்லி, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு எடுக்க விடாம சாலைமறியல் போராட்டத்துல ஈடுபட்டாங்க.காவலர்கள் சமாதானம் பேசியும் உறவினர்கள் யாரும் கலையுறமாதிரி தெரியல.. இந்த சூழல, ஸ்பெஷல் டீம் அமைச்சு தேடுதல் வேட்டையில ஈடுபட்ட போலீஸ், சாத்தான்குளத்துலேயே பதுங்கியிருந்த சுந்தர மடக்கி பிடிச்சிருக்காங்க. அதுக்குப்பிறகு, சுந்தர் மேல மர்டர் கேஸ் ஃபைல் பண்ண போலீஸ்காரங்க, அவன அரெஸ்ட் பண்ணி தொடர்ந்து விசாரணை நடத்திட்டு இருக்காங்க.