சேலம் மாவட்டம், காமலாபுரம் பகுதியில் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்த கணவரை, அரிவாள் மனையால் கழுத்தறுத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.ஆசாரி தெருவை சேர்ந்த செல்வம், வெள்ளம் தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தனது மனைவி பூங்கொடியுடனும், அக்கம்பக்கத்தினருடனும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.செல்வத்தின் செயலால் மன உளைச்சலில் இருந்த பூங்கொடி, நிகழ்வன்று வராண்டாவில் போதையில் படுத்துக்கொண்டிருந்த கணவர் செல்வத்தின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.