மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாணவியை சிலர் புகைப்படம் எடுத்ததாக கூறி அவரது சகோதரர் நண்பர்களுடன் இணைந்து அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த சம்பவம் அரங்கேறியது.பூதமங்கலத்தில் சென்று கொண்டிருந்த பேருந்தில் தர்மா, கபிலன், பிரவீன், பூபாலன், சச்சின் உள்ளிட்ட 6 பேர் ஏறி சிலரை தேடினர்.அப்போது அவர்கள் இல்லாத ஆத்திரத்தில் பேருந்தின் கண்ணாடியை உடைத்தும் நடத்துநரை தாக்கியும் சென்றதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்ததில், கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவியை புகைப்படம் எடுத்த மாணவர்களை தேடியதாகவும், அப்போது வீடியோ எடுத்த நடத்துநரை தாக்கியதும் தெரிய வந்தது.