கனமழையால் ஏற்காடு அருகே வெள்ளத்தில் அடித்துச் சென்ற பாலத்தை சீரமைத்துக் கொடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். புத்தூர் மலை பகுதியில் உள்ள தரை பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், புளியங்கடை, புத்தூர் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு சாலை துண்டிக்கப்பட்டது. பாலத்தின் ஓரத்தில்மரங்களை கொண்டு சிரிய பாலம் அமைத்து ஆபத்தான நிலையில் பாலத்தை கடந்து செல்வதாகவும், வாகனங்களில் செல்போர் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.